வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

அசாம் முதல்வராகிறார் ஹிமண்டா பிஸ்வா சர்மா!

அசாம் முதல்வராகிறார் ஹிமண்டா பிஸ்வா சர்மா!
சமீபத்தில் தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதில் தமிழகத்தில் திமுகவும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் புதுவையில் பாஜக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது
 
இந்தநிலையில் தேர்தல் நடைபெற்ற இன்னொரு மாநிலமான அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அம்மாநில பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் அசாம் மாநில பாஜக தலைவராக ஹிமண்டா பிஸ்வா சர்மா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அசாம் மாநில முதல்வராகவும் பதவி ஏற்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பை பாஜகவின் தலைமை அறிவித்துள்ளது என்பதும் அசாம் மாநில பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஹிமண்டா பிஸ்வா சர்மா அவர்களை ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது