செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (15:02 IST)

நீங்கள் முதல்வர் ஆகாதது எங்கள் இழப்பு… நடிகை விஜயலட்சுமி ஸ்டாலினுக்கு பாராட்டு!

நடிகை விஜயலட்சுமி தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் நாள் முன்னெடுப்புகளை அடுத்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக திமுக பதவியேற்ற முதல் நாளிலேயே 5 திட்டங்களை கையெழுத்திட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதிலும் முக்கியமாக நகர்ப்புற சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயணத்திட்டம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்று தந்துள்ளது. அவரின் இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுகள் கிடைத்துவரும் நிலையில் நடிகையும் இயக்குனர் அகத்தியனின் மகளுமான விஜயலட்சுமி ஸ்டாலினை பாராட்டி ஒரு டிவீட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் ‘கடந்த காலங்களில் நீங்கள் முதல்வர் ஆகாதது தங்கள் இழப்பு இல்லை.. எங்களின் இழப்பு. எத்தனை சீரான தலைமை… தமிழ்நாடு இனி தலைதூக்கும்’ என வானளாவப் புகழ்ந்துள்ளார்.