புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (12:47 IST)

கோபேக் மோடி, வெல்கம் மோடி ரெண்டுமே போலி!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதாக செய்திகள் வெளிவந்தவுடன் மோடி எதிர்ப்பாளர்கள் கருப்புக்கொடி காட்டவும், மோடி ஆதரவாளர்கள் அவரை வரவேற்கவும் தயாராகினர். இந்த நிலையில் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு 'கோபேக் மோடி, வெல்கம் மோடி' என்ற இரண்டு வித ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இரண்டையும் இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளின் டிரெண்டுகளும் போலியான டுவீட்டுக்களால் வந்தவை என தெரிய வந்துள்ளது. டுவிட்டரில் ரோபோட்கள் மூலம் செய்யப்படும் டுவீட்டுக்களை பாட் டுவீட்டுக்கள் என்று கூறுவதுண்டு. ஒரு விஷயத்தை டிரெண்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் சாப்ட்வேர் உதவியுடன் அந்த விஷயம் குறித்து ரோபோட் மூலம் பல டுவீட்டுக்களை டுவிட்டரில் பதிவு செய்யலாம்.
 
இம்மாதிரியான போலி டுவீட்டுகள் மூலம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்குவது கடந்த சில ஆண்டுகளாக சர்வ சாதாரணமாகி வருகிறது. ஒருசில குறிப்பிட்ட ஐடி நிறுவனங்களிடம் ஒரு தொகையை கொடுத்தால் போதும் அவர்கள் இந்த பாட் டுவீட்டுக்கள் மூலம் நாம் சொல்லும் விஷயத்தை டிரெண்ட் ஆக்கிவிடுவார்கள். ஒருசில நடிகர்களின் படங்கள் குறித்த பெரும்பாலான டிரண்டுகள் இம்மாதிரி வருபவைதான். எனவே இம்மாதிரியான போலி டுவீட்டுக்களை நம்பி உண்மையாகவே டிரெண்டு ஆகிவிட்டதாக யாரும் நம்ப வேண்டாம். இன்று டிரெண்டில் இருக்கும் கோபேக் மோடி, வெல்கம் மோடி ரெண்டுமே போலி டுவீட்டுக்கள் ஆனவை என்றே சமூக வலைத்தள நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.