வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:53 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்திக்க மனைவி சுனிதாவுக்கு அனுமதி!

sunita kejriwal
திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு அவரது மனைவி சுனிதாவுக்கு நேற்று திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று அனுமதி வழங்கி உள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது டெல்லி அமைச்சர் அதிஷ் என்பவரும் உடன் இருப்பார் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் எதிர்வாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிறை நிர்வாகிகள் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி சிறையில் உள்ள கெஜ்ரிவாலை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran