புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (19:47 IST)

பிரியங்கா காந்தி வீட்டுக்குள் நுழைந்த 7 பேர்! – நிர்வாகிகள் புகார்!

பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் அவரது வீட்டிற்குள் 7 பேர் கொண்ட குழு காரில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்ப பெற்ற மத்திய அரசு, எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டுமே அளிக்கப்படும் என சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்தது.

தற்போது பிரியங்கா காந்திக்கு மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ம் தேதி பாதுகாப்பு படையினரின் காவலை தாண்டி காரில் 7 பேர் பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.

அவர்கள் பிரியங்கா காந்தியுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும், பிரியங்கா புன்னகையுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பிரியங்கா காந்திக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என பிரியங்கா காந்தியின் அலுவலக நிர்வாகிகள் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.