ரூ.3.50க்கு மாஸ்க், தினமும் ரூ.500 வருமானம்: முதல்வரின் சாதனைக்கு பாராட்டு
ரூ.3.50க்கு மாஸ்க், தினமும் ரூ.500 வருமானம்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு நபரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வரவேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் எச்சரித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாஸ்க் தேவையை கருதி மருந்து கடைக்காரர்கள் மாஸ்க் விலையை இஷ்டத்துக்கு ஏற்றியுள்ளனர். 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய மாஸ்க்கை அதிகபட்சமாக ரூபாய் 50 வரை விற்பனை ஆவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகநாதன்ரெட்டியின் சூப்பர் ஐடியாவின்படி, அம்மாநிலத்தில் உள்ள சுயவேலைவாய்ப்பு பெண்கள் மாஸ்க்குகளை தயாரித்து வருகின்றனர். அவர்கள் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் ஒன்றின் விலை ரூபாய் ரூ.3.50 மட்டுமே என்றும் சுகாதாரத்துடன் அதிகப் பாதுகாப்புடன் கூடியவையாக இந்த மாஸ்குகள் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்தப் பெண்களுக்கு தினமும் ரூபாய் 500 வருமானம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சுயவேலைவாய்ப்பு பெண்கள் செய்யும் இந்த மாஸ்க்கை ஆந்திரா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அது மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. பத்து ரூபாய் மாஸ்க்கை 50 ரூபாய்க்கு மெடிக்கல் கடைக்காரர்கள் விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 3.50க்கு பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஐடியா செய்த ஆந்திர முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்