திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (12:36 IST)

விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்த மாணவர்கள்! – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Gas
ஆந்திராவில் பள்ளி சென்ற மாணவர்கள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வலசப்பாக்கம் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல பள்ளி தொடங்கி செயல்பட்டு கொண்டிருந்தபோது அருகே உள்ள ஆலையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இந்த புகை காற்று வாக்கில் பள்ளி இருக்கும் பகுதியில் பரவியதால் மாணவ, மாணவிகள் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

உடனடியாக மற்ற மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றிய ஆசிரியர்கள் மைதானத்தில் அவர்களை அமர வைத்துள்ளனர். மயக்கமடைந்த 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர் வந்து அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.