வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (16:36 IST)

99 ரூபாய் மதுவிற்பனை திடீர் ஒத்திவைப்பு.. ஆந்திர அரசு அதிரடி முடிவு..!

99 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படும் என ஆந்திரா அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும், மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்படும் என்றும், புதிய மதுபான கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். 
 
அந்த வகையில், 3736 சில்லறை மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட இருப்பதாகவும், இவை அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 5500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. 
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும் என்றும், 99 ரூபாய்க்கும், மற்றும் அதற்கு குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், மது பிரியர்கள் உற்சாகமடைந்த நிலையில், 99 ரூபாய் மதுவகை 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும், மதுபான கடைகள் தனியாராக மாறிய பிறகு இந்த மது அறிமுகம் செய்யப்படும் என்றும் தற்போது கூறப்பட்டுள்ளதால், மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
 
இருப்பினும், இன்னும் பத்து நாட்களில் 99 ரூபாய் மது ஆந்திராவில் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
 
 
Edited by Mahendran