திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 மே 2021 (10:50 IST)

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 - எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தமிழகத்தைப் போலவே அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,171 என்றும் ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 101 அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,35,491 என்றும் அம்மாநிலத்தில் 2,10,436 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இத்தொகை மூலம் கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.