1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:39 IST)

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா – தெலங்கானா..! ரூ.1 கோடி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.!!

Junior NTR
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு  தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி அளிக்கிறேன் என நடிகர் ஜூனியர் என்டிஆர் அறிவித்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. கனமழை வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன் என நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.