செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (10:23 IST)

பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்

பீஹாரில் பொறியாளரை கடத்திச் சென்ற பெண் வீட்டார் அவரை கட்டாயப்படுத்தி பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பொறியாளர் வினோத்குமார்(29). இவர் தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அவரது வழியில் குறுக்கிட்ட ஒரு கும்பல், வினோத்குமாரை கடத்திச் சென்று ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் பெண் வீட்டாரிடம் கதறி அழுது தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினார்.

அவரது கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாத பெண் வீட்டார் துப்பாக்கி முனையில் வினோத்குமாரை தாலி கட்ட வைத்தனர். இதுகுறித்து வினோத்குமாரின் சகோதரர்,  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். 
உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து வினோத்குமார் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பீஹாரில் மணமகன் கடத்தப்பட்டது தொடர்பாக, 3,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.