திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (07:29 IST)

அம்மாகிட்ட போய் விடு – கிடைத்தது மாருதி ராவ்வின் தற்கொலைக் கடிதம் !

தெலங்கானாவில் தன் மகளின் கணவனை ஆணவக் கொலை செய்த மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் எழுதிய தற்கொலைக்கு முன்பானக் கடிதம் கிடைத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த  பிரனய் குமார்,அம்ருதா தம்பதியினர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவர்களின் திருமனத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனைக்கு வெளியே பிரனயை, அம்ருதாவின் தந்தையால் அனுப்பப்பட்டகூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த சமபவத்தில் அம்ருதாவும் காயமடைந்தார்.

இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்தவரையும் அம்ருதாவின் தந்தையையும் காவல்துரை கைது செய்துள்ளது. அதன் பின்னர் நான்கு மாதத்தில் அம்ருதாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபப்ட்டுள்ள நிலையில் அம்ருதாவின் தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது மாருதி ராவ் உள்ள ஆர்யா வைஷ்ய பவன் ஹோட்டலில் அறை எண் 306ல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த தற்கொலை காரணமாக அந்த வழக்கில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து போலிஸார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அம்ருதா தனது தந்தையின் உடலைக் கடைசியாகப் பார்க்கவேண்டுமென போலீஸ் பாதுகாப்புடன் சென்று தூரத்தில் இருந்து பார்த்துள்ளார். மேலும் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்ட அறையில் கண்டு எடுக்கப்பட்ட கடிதத்தில் ‘ அம்மா அம்ருதா… உன் தாயிடம் சென்றுவிடு’ என எழுதியிருந்ததாக போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.