1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மே 2024 (12:57 IST)

சிஏஏ சட்டத்தை உங்கள் பாட்டியால் கூட ரத்து செய்ய முடியாது: ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்

சிஏஏ  சட்டத்தை உங்கள் பாட்டியால் கூட நிறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்திக்கு சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குடியுரிமை திருத்தச் சட்டம் என்று கூறப்படும் சிஏஏ சட்டத்தை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்துவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில் உங்கள் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பூமிக்கு திரும்பி வந்தால் கூட அதை ரத்து செய்ய முடியாது என்று ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார் 
 
உத்தரப்பிரதேசத்தில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் விவகாரத்தை முட்டுக்கட்டை போட்டது என்றும் பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர் தான் ராமஜென்ம பூமி பிரச்சனையில் வெற்றி கிடைத்தது என்றும் தெரிவித்தார் 
 
சிஏஏ சட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பேசி வருகின்றனர், ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி பூமிக்கு வந்தால் கூட அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது, இதை நான் சவாலாக சொல்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் இந்த சவாலுக்கு ராகுல் காந்தி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva