வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (19:39 IST)

மேற்குவங்கத்தை தங்கவங்கமாக மாற்றுவோம்: அமித்ஷா சூளுரை!

மேற்குவங்கத்தை தங்கவங்கமாக மாற்றுவோம்:
மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பாரதிய ஜனதா அடுத்ததாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சில மாநிலங்களில் வெற்றியும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பாஜகவின் அடுத்த டார்கெட் தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கட்சியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக இறங்கி உள்ளது 
 
குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக மேற்கு வங்கத்தில் களமிறங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மம்தா கட்சியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் திடீரென விலகி உள்ளனர் என்பதும் அவர்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அமித்ஷா மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக விற்கு ஒரு வாய்ப்பு தந்தால் மேற்கு வங்காளத்தை ஐந்து ஆண்டுகளில் தங்கவங்கமாக மாற்றுவோம் என்று என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேற்குவங்க மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது என்பதும் ஆச்சரிய தக்க ஒன்றாகும்