திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (20:37 IST)

விவசாயிகளின் கடனை செலுத்திய பாலிவுட் நடிகர்: என்னவொரு தாராள மனசு!

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் 1970 களிலிருந்து தற்போது வரை பல வெற்றி படங்களில் நடித்து கொடி கட்டி பறந்துகொண்டிருப்பவர்  நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த விவசாயிகளின் கடன்களை வங்கியில் செலுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அமிதாப் ,அவர் கூறியபடியே 2100 பீகார் விவசாயிகளின் கடன்களை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் அமிதாப், விவசாயிகளுக்கு உதவுவது இது முதல் முறை இல்லை என்றும், சென்ற வருடம் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களையும் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.