இந்தியாவில் கடையை மூடும் அமேசான்! என்ன ஆச்சு அமேசானுக்கு?
பிரபலமான அமேசான் நிறுவனம் தனது சேவைகளை தொடர்ந்து இந்தியாவில் மூடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஆன்லைன் ஷாப்பிங் செயலி அமேசான். அமேசான் ரொபாட்டிக்ஸ், ஏஐ தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு என பல துறைகளில் கால் பதித்து செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் அமேசானின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அமேசான் அகாடமியை அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் மூட இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்தது. இந்த அகாடமி போட்டு தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வந்த நிலையில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது Amazon Food சேவையையும் இந்தியாவில் நிறுத்தப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது. ஸ்விகி, ஸொமாட்டோ போல ஆன்லைன் உணவு டெலிவரி செயலியாக தொடங்கப்பட்ட அமேசான் ஃபுட்ஸ் அதிகமானோரை கவரவில்லை என தெரிகிறது. இதனால் எதிர்வரும் டிசம்பர் 29 உடன் இந்த சேவை இந்தியாவில் நிறுத்தப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது. தொடர்ந்து அமேசான் சேவைகள் இந்தியாவிலிருந்து வெளியேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit By Prasanth.K