1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (15:27 IST)

நாட்டுக்கு அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது: பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து..!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில் நடிகர் மாதவன் நாட்டிற்கு மிக அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதை அடுத்து நேற்று பிரதமர் மோடி மற்றும் 72 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். 
 
இந்த நிலையில் நடிகர் மாதவன் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கூறி இருப்பதாவது: நாட்டின் மிக உயர்ந்த பதவியில் 3-வது முறையாக பொறுப்பேற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
 
‘வசுதைவ குடும்பகம்’ தத்துவங்களுடன் நீங்கள் கருணையுடன் அபரிமிதமான வளர்ச்சி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றின் காலத்துக்கு எங்களை அழைத்துச் சென்று, உலகமே பிரமிப்புடன் பார்க்கும் பெருமைமிக்க தேசமாக எங்களை மாற்றுவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
 
உங்களது நல்ல ஆரோக்கியத்துக்காகவும், இந்த மகத்தான நாட்டுக்கு காத்திருக்கும் அற்புதமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
 
Edited by Siva