ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (11:25 IST)

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மை இன மக்கள் சிறுபான்மையினர் மக்களாக மாறிவிடுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மதமாற்றம் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தினமும் ஆயிரக்கணக்கில் லட்ச கணக்கில் மதமாற்ற நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துவ பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை அழைத்துச் சென்றதாக கைலாஷ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் கருத்து தெரிவித்துள்ளார்.

மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பாலும் மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் அரசமைப்பு பிரிவு 25 மதமாற்றம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஏழை மக்களை பணத்தாசை காட்டி மதமாற்றம் செய்யும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran