செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (14:40 IST)

அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் 2 நாட்களுக்குள் மூட வேண்டும்: டெல்லி நீர்வளத்துறை உத்தரவு..

டெல்லியில் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு நாட்களுக்குள் மூடப்படாமல் இருக்கும் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட வேண்டும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

மேற்கு டெல்லியில் நேற்று 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் ஒருவர் விழுந்ததை அடுத்து அவரை உயிருடன் மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை வீர முயற்சியில் ஈடுபட்டது. இருப்பினும் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்

இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை ஒன்று தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி மர்லேனா என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை 48 மணி நேரத்தில் மூடாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva