Daily Horoscope
✕

கல்லூரி மாணவர்களின் போராட்டம்; வெடித்தது வன்முறை

Written By Arun Prasath
Updated: திங்கள், 16 டிசம்பர் 2019 (09:04 IST)
டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, உத்தர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை வெடித்தது.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டு, மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

கனமழை எதிரொலி!.. கொடைக்கானல், நீலகிரி பக்கம் போகாதீங்க!..

எப்பவேனா இடைத்தேர்தல் வரும்!.. ரெடியா இருங்க!.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..

பொய் சொல்றாங்க!.. திமுக - அதிமுக சேரல!.. இதான் நடந்துச்சி!.. டிடிவி தினகரன் பேட்டி...

நான் மிரட்டினேன்.. அதனாலதான் இந்தியா - பாகிஸ்தான் போர் நின்னுச்சு!.. அடங்காத டிரம்ப்!...

சும்மா ஆசைக்கு அரசியலுக்கு வரக்கூடாது!.. தனுஷுக்கு பேரரசு அட்வைஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments