அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்: பாஜக சதி என சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு..!
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடரும் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்று காலைள் அந்க் கணக்கு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.
இந்த செயலைச் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் 'அரசியல் சதி' மற்றும் 'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஆளும் கட்சியின் விருப்பப்படி சோசலிஸ்டுகளின் குரலை ஒடுக்க முயற்சிப்பது, நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையைக் காட்டுவது" என்று கோசி எம்.பி. ராஜீவ் ராய் மற்றும் செய்தி தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முடக்கத்தில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று உறுதிப்படுத்தினார். "அகிலேஷ் யாதவின் கணக்கிலிருந்து தகாத பதிவு பகிரப்பட்டதால், ஃபேஸ்புக் அதன் கொள்கைகளின்படி நடவடிக்கை எடுத்துள்ளது" என்று அவர் விளக்கம் அளித்தார்.
முடக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை மெட்டா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
Edited by Mahendran