1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (15:57 IST)

அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்லும் வழியில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து தருமபுரி அருகே காரியாமங்கலம் என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
அமைச்சர்  அன்பில் மகேஷ் குறித்த உடல்நல குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran