வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (17:10 IST)

நேருக்கு நேராக மோதிய ஏர்போர்ஸ் விமானங்கள்... பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில் இந்திய விமானப்படை  விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதால் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது. இங்கு விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கும். 
 
எனவே இதற்கான ஒத்திசைவில் இந்திய விமானப்படைக்கு உரிய சூரியகிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன...அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் இரு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தன.
 
இதில் விமானிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் குதித்து தப்பிச்சென்று விட்டனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளதாகவும் தலவல் வெளியாகிறது. ஆனால் இருவர் மிகவும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.