1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (13:43 IST)

உபியில் பயணிகள் வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் வாகனம் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
இன்று காலை உபியில் உள்ள உச்சாவ்லியா என்ற பகுதியில் சரக்குகள் எற்றி வைக்கபட்டிருந்த லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியில் வந்து கொண்டிருந்த பயணிகள் வாகனம் ஒன்று அந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதனால் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் மற்றும் டிரைவர் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.