சாக்கடையில் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட எய்ட்ஸ் நோய் பாதித்த சிறுமி
ஐதராபாத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை விடுதி நிர்வாகம் ஒன்'று சாக்கடையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் அமைந்திருக்கும் அகப்பே என்ற தொண்டு நிறுவனம் எச்.ஐ.வி என்ற எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருகிறது. இந்த விடுதியில் இருக்கும் சிறுமிகளை கொண்டு சாக்கடை சுத்தம் செய்யும் அவலம் தற்போது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்வதும், மற்ற சிறுமிகள் அவருக்கு உதவுவது போன்ற புகைப்பட காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து விடுதியின் வார்டன் பிரஜாவதி உள்ளிட்ட விடுதி காவலர்கள் மீது அளிக்கபப்ட்ட புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் மகேஷ் பகவத் கூறியுள்ளார். இது குறித்து விடுதி சிறுமிகள் கூறுகையில்,' பல சமயங்களில் விடுதியை சுத்தம் செய்ய நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.