திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:47 IST)

எம்பி ஆவதற்கான வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: ஆம் ஆத்மி எம்பி வலியுறுத்தல்..!

AAP MP
நாடாளுமன்ற உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சட்டா வலியுறுத்தியுள்ளார்.
 
மக்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா,  வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக நாம் இருக்கிறோம் என்றார். 
 
மாறாக, இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடாக நாம் இருக்க வேண்டும் என்றும் இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

 
எனவே இந்திய எம்.பி.க்களுக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்று ராகவ் சட்டா வலியுறுத்தினார்.