செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:34 IST)

கோவாக்சின் தடுப்பூசி விலை அதிரடியாக குறைப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காக கோவிஷீல்டு நிறுவனம் சமீபத்தில் ரூபாய் 400 இல் இருந்து ரூபாய் 300 ஆக சமீபத்தில் விலை குறைப்பு செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து தற்போது கோவாக்சின் தடுப்பூசியும் ரூபாய் 600 லிருந்து ரூபாய் 400 ஆக விலை குறைப்பு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த விலை குறைப்பு மாநில அரசுகளுக்கு மட்டும்தான் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ரூ.1200க்கு தான் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது 
 
கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் நிலையில் தற்போது குறைக்கப்பட்டு இருப்பது மாநில அரசுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இரண்டு தடுப்பூசிகளும் இலவசமாகவே பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது