1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (17:18 IST)

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பிரபல நடிகை விடுதலை: வெளியே வந்ததும் ஆனந்தக்கண்ணீர்..!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பிரபல நடிகை ஒருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்ததும் தாயாரை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சார்ஜாவில் நடிகை கிரிசா என்பவர் கஞ்சா இருந்ததாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தனது மகள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் போலீஸ் புகார் அளித்தார்.  இந்த புகாரியின் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவரது வீட்டில் அருகில்  வசித்த ஆண்டனி என்பவரின் தங்கைக்கும் நடிகை கிரிசாவுக்கு முன்பகை  இருந்ததாகவும் இதற்கு பழி வாங்கவே ஆண்டனி தனது நண்பர் மூலம் கிரிசாவுக்கு கஞ்சா பொட்டலம் கொடுத்து அனுப்பி இதுகுறித்து போலீஸிடம் தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்தது
 
இதனை அடுத்து ஆண்டனி மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டதை அடுத்து நடிகை கிரிசா விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்ததும் தாயாரை பார்த்து உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து ஆனந்த் கண்ணீர் வடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran