திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:24 IST)

பாஜகவில் இணைகிறாரா விஜயசாந்தி! தெலங்கானா அரசியலில் பரபரப்பு!

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுக்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த விஜயசாந்தி தல்லி தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அக்கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்வுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக காங்கிரஸில் இணைந்தார். அங்கே அவருக்கு பிரச்சாரக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது மீண்டும் பாஜகவில் சேரப்போவதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை அவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.