1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (17:43 IST)

நகரியில் நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்!

அடுத்த மாதம் 13-ஆம் தேதி ஆந்திராவில் பொது தேர்தலுடன் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
 
நேற்று துவங்கி ஆந்திரா முழுவதும் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
நகரி தொகுதியில் இருந்து அமைச்சர் ரோஜா மீண்டும் ஒ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் நிலையில்  ஆதரவாளர்கள்,கட்சி தொண்டர்கள் ஆகியோருடன் ஊர்வலமாக சென்று ரோஜா தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.