திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (14:42 IST)

மீண்டும் மோடி, வேண்டும் மோடி: தாமரை சின்னத்தை சுவரில் வரைந்த அண்ணாமலை..

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதோடு தாமரை சின்னத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுவரில் வரைந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி 
 அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, நமது பாஜக தேசியத் தலைவர் திரு 
ஜேபி நட்டா  அவர்கள், "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை, சுவர் விளம்பரங்கள் வாயிலாக முன்னெடுத்தார். 
 
அதன் தொடர்ச்சியாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, காளப்பட்டி ஒன்றியம், 408வது பூத்திற்கு உட்பட்ட பகுதியில், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு முருகானந்தம் , கோவை மாநகர் மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்க்மார்   மற்றும் பூத் நிர்வாகிகள் முன்னிலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் ஈடுபட்டோம். தமிழகம் முழுவதும் தமிழக பாஜக  சகோதர சகோதரிகள் சுவர் விளம்பரங்கள் மூலமாக பாராளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குடன் பயணிக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும்  பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 
 
 
Edited by Siva