நடிகை கடத்தப்பட்ட வழக்கு ; ஆஜராகும் காவ்யா மாதவன் - விரைவில் கைது?

'
Murugan| Last Updated: வெள்ளி, 14 ஜூலை 2017 (15:52 IST)
காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான கேரள நடிகையின் வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை காவ்யா மாதவன் விரைவில் போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆவார் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் உலா வருகிறது.

 

 
நடிகை கடத்தப்பட்ட  வழக்கில் நடிகர் திலீப் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏனெனில், நடிகை கடத்தி பாலியல் பலாதகாரத்திற்கு உட்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவே பல்சர் சுனில் தெரிவித்துள்ளான். இதையடுத்து, அந்த ஆடை நிறுவனத்தில் கடந்த 1ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது  சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், திலீப்பின் கைதுக்கு பின் காவ்யா மாதவன் மற்றும் அவரது தாய் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் பெங்களூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த போலீசார், நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது.
 
இதையடுத்து இன்று இரவு கொச்சினில் காவ்யா மாதவன் மற்றும் அவரின் தாய் ஆகியோர் போலீசார் முன் ஆஜராவார்கள் எனக் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :