அரசியலை கற்க வந்தேன் - பினராயி விஜயனை சந்தித்த கமல் பேட்டி


Murugan| Last Updated: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:47 IST)
நடிகர் கமல்ஹாசன் இன்று கேரளா  முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து உரையாடினார். 

 

 
சமீபகாலமாக, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். முக்கியமாக, ஊழலுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார். அவரது ரசிகர்களையும் பொது சேவைக்கு வரும்படி அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.
 
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க இன்று அவர் கேரளா சென்றார். முதல்வரின் வீட்டிற்கு சென்ற அவருக்கு மதிய உணவாக ஓனம் விருந்து பறிமாறப்பட்டது. 


 

 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் “சென்ற வருட ஓணம் பண்டிகைக்கே என்னை கேரள வருமாறு முதல்வர் அழைத்தார். ஆனால், எனது காலில் அடிபட்டிருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. எனவே, தற்போது வந்துள்ளேன். மேலும், தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து எதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் ஒரு அரசியல் சுற்றுலாவாகவும் இதை எடுத்துக்கொண்டேன். ஏனெனில் இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :