செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (09:34 IST)

விவேகம் படம் பார்க்கும் கமல்ஹாசன் - அஜித்திற்கு வாழ்த்து

நடிகர் அஜித் நடித்து இன்று வெளியான விவேகம் படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  அஜீத் ரசிகர்கள் இதை ஒரு விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். 
 
வெளிநாட்டில் இப்படத்தை சில ரசிகர்கள் இப்படம் அருமையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இப்படம் இன்று காலை வெளியிடப்பட்டது. 
 
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ விவேகம் படத்தை எனது மகள் அக்‌ஷரா ஹாசனுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நல்ல சேதிகளை கேள்விப்படுகிறேன். திரு. அஜீத் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
விவேகம் படத்தில் அக்‌ஷராஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.