1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (12:08 IST)

3-வது முறையாக நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!!

Aksay Kumar
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அமெரிக்கா,  இங்கிலாந்து போன் நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போதும் உள்ளது. 
 
இந்நிலையில் இந்திய பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அக்ஷய் குமாருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தர்.

அதன் பின் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் அவரை தாக்கியது. இதனால் அக்ஷய் குமாரால் அப்போது நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 

 
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக கொரோனா வைரஸ் தாக்கியதால், அக்ஷய் குமாரால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.