பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடுமை: இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்குமோ?
பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர செயல் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் மாவட்டம், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் நடைபெறவில்லை.
இருப்பினும் போபானி என்ற கிராமத்தில், கிடைக்கும் தண்ணீரை வைத்து சில விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சில பசுக்கள் பயிர்களை மேய்ந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் பயிர்களை மேயும் பசுக்களின் பின்புறத்தில் அந்த கிராம மக்கள் ஆசிட் ஊற்றி வருகின்றனர். இதன் காரணமாக சில மாடுகளின் பின்பகுதி வெந்து போயுள்ளது.
இந்த ஆசிட் வீச்சால், சில பசுக்களின் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.