வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (17:16 IST)

கூகிளில் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன்! – டாப் 10ல் ரனு மொண்டல்!

கூகிளில் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் நாடுகள் அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலை கூகிள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள், புதிய நபர்கள் ஆகியோரின் பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது.

அதில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் டாப் 10 இடங்களில் ராணுவ வீரர் அபிநந்தன் முதலிடம் பிடித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலில் விங் கமாண்டராக இருந்தவர் அபிநந்தன்.

எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கி பிறகு இந்தியாவின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் மூலம் இந்திய அளவில் பிரபலமான அபிநந்தனை போலவே பலரும் அருவா மீசை வைத்துக் கொண்டனர்.
இந்த வருடத்தில் அதிக தேடப்பட்டவர்களில் அபிநந்தனுக்கு பிறகு லதா மங்கேஷ்கர், யுவராஜ் சிங் ஆகியோர் உள்ளனர். நான்காவது இடத்தில் சூப்பர் 30 படத்தின் நிஜ நாயகன் ஆனந்த் குமார் உள்ளார்.

இவர்கள் தவிர்த்து 7வது இடத்தில் ரனு மொண்டல் இடம் பெற்றுள்ளார். ரயில் நிலையத்தில் பாட்டு பாடி வந்த ரனு மொண்டல் வீடியோ இணையத்தில் வைரலாக, அவருக்கு பாட வாய்ப்பு கொடுத்தார் இந்தி இசையமைப்பாளர் ஹிமேஷ் ரிஷேமியா. அதன் மூலம் தற்போது பிரபலமாகியிருக்கும் ரனு மொண்டல் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.