ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (20:53 IST)

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய தலைவரான ஆஷிஷ் கேதன் என்பவர் விலகியுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறித்து ஆஷிஷ் கேதன்கூறியபோது, ', கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன். குடும்பம் மற்றும் நண்பர்கள் கருத்தை கேட்ட பின்னர் தற்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என கேதன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான அசுதோஸ் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது கேதனும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.