வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (13:36 IST)

ஆதார் கார்டு இல்லாமல் இனி பேன் கார்டு வாங்க முடியாது - மத்திய அரசு உத்தரவு

வருகிற ஜுலை 1ம் தேதி முதல் அனைத்து பேன் கார்டுகளிலும், ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என்கிற உத்தரவு மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.


 

 
வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
 
இதைத் தொடர்ந்து, வரிமான வரி சட்டத்தில் இன்று திருத்தம் செய்து ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பான் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.  வருகிற ஜூலை 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருகிறது. எனவே, இனிமேல் ஆதார் கார்டு இல்லாமல், இனிமேல் யரும் புதிதாக பேன் கார்டு வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.