செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:49 IST)

மூட்டை மூட்டையாக குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

aadhar pan
மூட்டை மூட்டையாக குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
மூட்டை மூட்டையாக குப்பைத்தொட்டியில் ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னகிரி என்ற பகுதியில் உள்ள மக்கள் குப்பைத்தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் 
 
காவல்துறை விரைந்து வந்து விசாரித்தபோது அந்த பகுதியில் உள்ள தபால் ஊழியர்கள் தான் குப்பைத்தொட்டியில் அந்த மூட்டையை குப்பைத்தொட்டியில் போட்டதாக விசாரணையில் தெரியவந்தது 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக ஆதார் கார்டு, பான் கார்டுகள், கடிதத்தை டெலிவரி செய்யாமல் சேர்த்து வைத்து குப்பைத்தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து விசாரணை செய்ய அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது