ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:37 IST)

வோட்டர் ஐடி - ஆதார் இணைப்பு கட்டாயம்!!

வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
கள்ள ஓட்டுகளை தடுக்கவும், ஒரே வாக்காளர் பல இடங்களில் இடம்பெறுவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு செய்தது தேர்தல் ஆணையம். ஆனால், இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.  
 
எனினும் இதை கைவிடாமல் தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண் இணைப்பு குறித்து விளக்கியும், இந்த இணைப்பிற்காக அனுமதி கோரியும் கடிதம் ஒன்றை எழுதியது.  
 
இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலித்து வந்த மத்திய சட்ட அமைச்சகம் தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே 38 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.