வருமான வரிக்கும் பான் எண்ணிற்கும் கட்டாயமாக்கப்படும் ஆதார் எண்!!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை விண்ணப்பிப்பதற்கும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது.
ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஒவ்வொருவரும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணை குறிப்பிடுவது அல்லது ஆதார் திட்டத்தில் பதிவு செய்ததற்கான எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆதார் எண் இல்லாதவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.