ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (07:39 IST)

பாஜகவில் சேர்ந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்: முஸ்லீம் குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவில் ஒரு முஸ்லீம் பெண் இணைந்ததை அடுத்து அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் குலிஸ்தனா என்ற முஸ்லீம் பெண் தனது குடும்பத்தினர்களுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு தீவிர பாஜக எதிர்ப்பாளர். இந்த நிலையில் அந்த முஸ்லீம் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இந்த செய்தியை அறிந்த வீட்டின் உரிமையாளர் ஆத்திரமடைந்து பாஜகவில் சேர்ந்தவர்கள் எனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்க கூடாது, உடனே காலி செய்யவும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்த முஸ்லீம் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது
 
இதுகுறித்து அந்த முஸ்லீம் பெண் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நான் நேற்று பாஜகவில் இணைந்தேன். அடுத்த நாளே வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறியதோடு என்னிடம் மரியாதைக்குறைவாகவும் நடந்து கொண்டார். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளிக்கவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
 
வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களை காலி செய்ய பல்வேறு காரணங்கள் கூறியதை பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரு கட்சியில் இணைந்ததற்காக அதிலும் நாட்டை ஆளும் ஒரு கட்சியில் இணைந்ததற்காக வீட்டை காலி செய்ய சொல்லும் வீட்டின் உரிமையாளர் அனேகமாக இவர் ஒருவராகத்தான் இருப்பார் என தோன்றுகிறது