திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:47 IST)

தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி..! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Sump Tank
ஹைதராபாத்தில் உள்ள தங்கும் விடுதியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியின் அஞ்சயா நகரில் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள நிலத்தடி நீர் சம்ப் தொட்டி திறந்திருந்த நிலையில், 22 வயதான மென்பொருள் ஊழியர் ஷேக் அக்மல், எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார்.
 
அப்போது அங்கிருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் திறக்கப்பட்ட தொட்டியில் விழுந்ததில் அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த ராயூர் போலீசார், அலட்சியம் காட்டியதற்காக, குறிப்பாக சம்ப் மூடியை திறந்து வைத்ததற்காக, விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திறக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் ஷேக் அக்மல் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.