வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (15:58 IST)

பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: பொதுமக்கள் முன்னிலையில் பைக்கை எரித்த நபர்

கர்நாடக தேர்தலை முன்னிட்டு 15 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல், விலை, தேர்தல் முடிந்த அடுத்த நாள் முதல் பயங்கரமாக ஏறி வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்று சாதனையாக பெட்ரோல் விலை ரூ.80ஐ தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், அதிகப்படியான வரியினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தனது சொந்த பைக்கை பொதுமக்கள் முன்னிலையில் அதே பெட்ரோலை ஊற்றி எரித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.