1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (08:38 IST)

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, முதலமைச்சருக்கு சம்மன்..!

பாஜக தொடங்க அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சோக்குமார் ஆகியோர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட சில விளம்பரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி சித்தாராமையா மற்றும் டி கே சுகுமார் ஆகிய மூவர் மீதும் பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 
 
பாஜகவை சேர்ந்த கேசவ பிரசாத் என்பவர் கடந்த மே மாதம் பதிவு செய்த இந்த வழக்கில் மூவருக்கும் சம்மன் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளது. கர்நாடகாவில் நடந்த பேரணியின் போது மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி ஏற்கனவே தனது எம்பி பதவியை இழந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் மீது அவதூறு வழக்கு பாய்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva