வியாழன், 24 நவம்பர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: வியாழன், 24 நவம்பர் 2022 (15:20 IST)

''வாரிசு'' படக்குழுவிற்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ்

varisu
நடிகர் விஜய்யின் ‘’வாரிசு’’ படக்குழுவிற்கு விலங்குகள் நலவாரியம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட  மா நிலங்களில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்.

எனவே, தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில், தெலுங்கு தயாரிப்பாளர்  தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், விஜய்- ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படம் வரும் பொங்கல்- சங்கராந்தி பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமான ஈடுபட்டுள்ள நிலையில், சமீபத்தில் ரஞ்சிதமே பாடலும் ரிலீஸானது.

இந்த நிலையில்,  வாரிசு படத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், இதற்கு, முறைப்படி, விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது.

எனவே, இதுதொடர்பான புகாரிற்கு, அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டுமென வாரிசு படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Edited by Sinoj