10000 ரூபா கொடுத்தா தான் ட்ரீட்மெண்ட் - மருத்துவரின் வக்கிர புத்தியால் உயிரிழந்த சிறுவன்
உத்திரபிரதேசத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர் கூறியதால் ஒரு அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பால கிஷான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தராம்பால். இவரது 10 வயது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால், அவனை தராம்பால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடையவே அங்கிருந்த மருத்துவர்களை சிறுவனை மேல் சிகிச்சைக்காக பரேலி மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்பேரில் தராம்பால் தனது மகனை பரேலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், தராம்பாலிடம் உன் மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றனர். மேலும் செலிவியருக்கும் ரூ.500-ம் தரகோரி கேட்டனர். அதனை கட்ட முடியாததால் தராம்பாலின் மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தராம்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை விசாரித்து வருகின்றனர்.