பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு தயார் ஆனால்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, மத்திய அரசுடன் போராடி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இயக்குநர் பா.ரஞ்சித்தின் சந்திப்பின் போது, ரஞ்சித் பேரறிவாளன் விடுதலை குறித்து பேசினார். பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் கூறினார்.
இதுகுறித்து பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் ஆனால் மத்திய அரசு தான் அவர்களை விடுவிக்க முடியாது என விடாப்பிடியாய் உள்ளது. இருந்த போதிலும் மத்திய அரசுடன் போராடி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.