எவனா இருந்தாலும் வெட்டுவேன்!! ஆர்வக்கோளாறில் வாயைவிட்டு மாட்டிக்கொண்ட எம்.எல்.ஏ

MLA
Last Modified திங்கள், 7 ஜனவரி 2019 (14:21 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் எவனா இருந்தாலும் வெட்டுவேன் என கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் பத்ராவதி என்ற பகுதியில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதி மக்கள் ஒரு கோவிலை கட்ட திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் இங்கு கோவிலெல்லாம் கட்டக்க்கூடாது என மக்களிடம் கூறியிருக்கின்றனர்.
 
இதனால் வேதனையடைந்த மக்கள், இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏவான சங்கமேஸ்வரா என்பவரிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், அதே இடத்தில் கோவிலை கட்டுங்கள் எவனாவது தடுத்தால், அவன் கை, கால்களை வெட்டுவேன் என பேசினார். இவர் பேசியதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :